Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அனிகேத் வர்மாவின் அற்புதமான பேட்டிங் அவர் யார் என்று அனைவரையும் தேட வைத்திருக்கிறது... மூன்று வயதில் தனது தாயை இழந்து...அரவணைக்க ஆள் இல்லாமல் தவித்து..மாமாவால் தத்தெடுக்கப்பட்டு.. சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்தாலும் கிரிக்கெட் மீதான கனவை எட்டிப்பிடிக்க போராடி இன்றைக்கு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அனிகேத் வர்மா...யார் இவர்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய அனிகேத் வர்மா கடந்து வந்த பாதை வலிமிகுந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியில் 2002 ஆம் ஆண்டி  பிறந்தவர் அனிகேத். 

மூன்று வயதிலேயே தாயை இழந்த அனிகேத் வர்மாவை தந்தை வழி மாமனாரன அமித் வர்மா எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். சிறுவயதில் வறுமை ஒரு புறம் வாட்டினாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் இவரை விடவில்லை. அதன்மூலம் தான் கற்றுக்கொண்ட கிரிக்கெட்டை வைத்துகொண்டு ரயில்வே யூத் கிரிக்கெட் கிளப்புக்குச் சென்றார். அனிகேத் சர்மாவின் கிரிக்கெட் ஆர்வத்தை தெரிந்து கொண்ட பயிற்சியாளர் நந்த்ஜீத் இவருக்கான கிரிக்கெட் பயிற்சிகளை வழங்கினார்.

ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரையும் பார்த்து வளர்ந்த அனிகேத் வர்மாவிற்கு அவர்களை போல் தானும் ஒரு சிறந்த பேட்டராக மாறவேண்டும் என்ற ஆசையை மெய்யாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டில் நடைபெற்ற புச்சி பாபு டோர்னமெண்டில் சதல் விளாசி அசத்தினார்.அதேபோல், மத்திய பிரதேசம் பிரீமியர் லீக்கில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய பிரதேசம் பிரீமியர் லீக்கில் மால்வா பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 41 பந்துகளில் 123 ரன்கள். அந்த போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.அந்த லீக்கில் மொத்தம் 273 ரன்கள் குவித்தார்.

இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்ட அனிகேத் வர்மாவின் அதிரடி ஆட்டத்தை தெரிந்து கொண்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் ஏலத்தில் எடுத்தது. மத்தியப் பிரதேச அணிக்காக அனிகேத் ஒரே ஒரு உள்நாட்டு டி20 சீனியர் போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும் ஹைதரபாத் அணிக்காக இவர் விளையாடி வரும் விதம் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இப்படியே இவர் அதிரடியாக விளையாடி வந்தால்  நிச்சயம் இந்திய கிரிக்கெட்டிலும் இவருக்கான பாதை உருவாகும் என்பதில் மாற்றுக்காருத்தில்லை.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola