RCB Troll Memes | உனக்கு டீ கஃப் தான்! ஆடிய ஆட்டம் என்ன! RCB கதறல் memes!

Continues below advertisement

உனக்கு டீ கஃப் தான்! ஆடிய ஆட்டம் என்ன! RCB கதறல் memes!

 

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோற்றதை கிண்டலடித்து ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர். 

ஐபில் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் பெங்களூரு அணி லீக் போட்டிகளில் முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் மீதமிருந்த 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.தொடர்ந்து 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லாமல் இருக்கும் அந்த அணியின் ஏக்கம் இந்த ஆண்டு முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

ஏற்கனவே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் தங்கள் அணியை நுழைய விடாமல் தடுத்ததாக சென்னை அணி ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். ஆனாலும் இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை வெல்லட்டும் என மனதை தேற்றிக்கொண்டனர். ஆனால் பெங்களூரு அணி ரசிகர்கள் செய்த அலப்பறை ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் வன்மத்தை கக்க வைத்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை தெறிக்க விட்டனர். சமூக வலைத்தளங்களை திறந்தாலே பெங்களூரு அணியை கிண்டலடித்து பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆடிய ஆட்டம் என்ன, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என பாடல்களையும் ஒலிக்க விட்டுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram