CSK Vs RCB Match | ஈ சாலா கப் நம்தே RCB FANS நூதன வழிபாடு மாரியம்மா மாரியம்மா

Continues below advertisement

 ஈ சாலா கப் நம்தே RCB FANS நூதன வழிபாடு மாரியம்மா மாரியம்மா

கரூர் மாரியம்மன் கோவிலில் இந்த முறை ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேங்காயில் RCB 2024 என்று எழுதி உடைத்து வழிபாடு நடத்தினர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் ராயல் பெங்களூர் அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ஐபிஎல் கப் ஜெயிக்க வேண்டும் என்று கரூர் மாரியம்மன் கோவிலில் இளைஞர்கள் தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்டனர். கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமராவதி ஆற்றில் கம்பம் அனுப்பும்  விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்துவர்.

இந்த நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த, கரூர் மாரியம்மன் கோவிலில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பிரித்விராஜ் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை சேர்ந்த அவரது நண்பர் பிரசாந்த் (மும்பை இந்தியன்ஸ் ரசிகர்) ஆகிய இருவரும் இந்த முறை ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேங்காயில் RCB 2024 என்று எழுதி உடைத்து வழிபாடு நடத்தினர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram