SRH VS RR Prediction | ஆப்பு வைக்க காத்திருக்கும் RR வலையில் சிக்குமா SRH கம்மின்ஸ் Vs சஞ்சு

Continues below advertisement

ஆப்பு வைக்க காத்திருக்கும் RR வலையில் சிக்குமா SRH கம்மின்ஸ் Vs சஞ்சு

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில்,  ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

வழக்கம்போல் 10 அணிகளுடன் தொடங்கிய, நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 70 லீக் சுற்று போட்டிகள், ஒரு தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டி ஆகியவற்றின் முடிவில், 7 அணிகள் வெளியேற 3 அணிகள் மட்டுமே தற்போது மீதமுள்ளன. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடப்போவது யார் என்பதை இறுதி செய்யும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற ஐதராபாத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறுவதோடு, இறுதிப்போட்டியிலும் வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக இரு அணிகளும் தலா இரண்டு முறை, இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் ராஜாஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி ஐதராபாத்திற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 220 ரன்களையும், குறைந்தபட்சமாக 102 ரன்களையும் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானிற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் சேர்த்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram