2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச்..தினேஷ் கார்த்திக் Prediction! T20 Worldcup 2021

Continues below advertisement

இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ள 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க உள்ளது. இந்நிலையில், டி-20 உலககோப்பைக்கான அட்டவனை வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 மார்ச் மாத முடிவில், சர்வதேச டி-20 தரவரிசை பட்டியலின் அடிப்படையில் டி-20 உலகக்கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், க்ரூப் 1 மற்றும் 2 என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர். சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர். இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும்.

க்ரூப்: ஏ இலங்கை, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா க்ரூப்: பி வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன். இந்நிலையில், க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், பி1 மற்றும் ஏ2 என குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் இன்னும் முடிவாகவில்லை.

முதல் சுற்றுப்போட்டிகளின் முடிவில் சூப்பர் 12 பிரிவுக்கு தேர்வாகும் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கும். மேலும், அபுதாபியில் நடக்க இருக்கும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயில், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram