IND W vs PAK W: பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி! தொடரும் சாதனை!
ABP NADU
Updated at:
06 Mar 2022 05:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIND W vs PAK W: மகளிர் உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.