
Wheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மானஸ் சேவா சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய தேசிய கோப்பைகான சக்கர நாற்காலி கிரிக்கெட்டில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது .
குஜராத்தின் சூரத்தில் உள்ள லால்பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் எட்டு மாநிலங்களுக்கு இடையில் 15 விறுவிறுப்பான போட்டிகள் நடை பெற்றன. இறுதிப் போட்டியை குஜராத் உள்துறை அமைச்சர் ஹரி சங்கவி மார்ச் 26, 2025 அன்று துவக்கி வைத்தார். அந்த இறுதி போட்டியில் குஜராத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றது.
தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணி வென்றது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. இந்த வெற்றி மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கான அடையாளமாகவும் விளங்குகிறது.
இப்போட்டி முடிந்து தமிழ்நாடு திரும்பிய தமிழக அணி வீரர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் ஆர்.முருகன்ராஜ் அவர்கள் அனைவர்க்கும் மாலை அணிவித்து வரவேற்று அவரது மனமார்ந்த பாராட்டுகளையும், தெரிவித்துக் கொண்டார்.