Gambhir Coaching | நான் சொல்றத கேளு ரோகித்அடம்பிடித்த கம்பீர்.. ரோகித்தின் பரிதாப நிலை !
ஒரு உலகக்கோப்பை ஜெயித்த கேப்டனை இந்த அளவுக்கு தலை குனியா வைப்பீங்களா கம்பீர், அதுவும் ஒரு அனுபவமுள்ள ஒரு அணியை வச்சிட்டு எக்ஸ்ப்ரிமென்ட் பண்றேன்னு இப்படி தொடரை இழந்து மொத்த இந்திய அணியின் ஒட்டு மொத்த கான்பிடென்சையும் கம்பீர் உடைச்சிட்டார் என்ற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் நடந்து முடிந்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
அடுத்ததாக ரோகித், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் ஒரு அனுபவம் வாய்ந்த அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி களமிறங்கியது.
இந்த தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எளிதில் வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணிக்கு இலங்கை அணி பாடம் புகட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வி அடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. . இதுமட்டுமில்லாமல் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இலங்கைக்கு எதிராக தொடரை இழந்த ஒரு மோசமான ரெக்கார்ட்டுடன் தனது பயிற்சியாளர் பயணத்தை தொடங்கியுள்ளார்.
குறிப்பாக ரோகித்தின் கேப்டன்சியும் கம்பீரின் சில ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக்கூட ரோகித் தனது கேப்டன்சி மூலம் பல தொடர்களை வென்று கொடுத்திருக்கிறார்.
ஆனால் இவ்வளவு பெரிய ஒரு வலுவான அணியை வைத்து ரோகித்தால் ஜெயிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே கம்பீர் தான் என்கிறார்கள்.
குறிப்பாக கம்பீர் செய்த ஹைபிரிட் பேட்டிங் ஆர்டர் தான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, மூன்று போட்டிகளிலுமே இந்திய அணி வீரர்கள் வெவ்வேறு போசின்களில் தங்களது பேட்டிங்கை ஆடினார்கள். இதனால் யாருக்குமே சரியான ரோல் இல்லாமல் ஆடினர், வழக்கமாக 4-ஆம் வரிசையில் ஆடுக் ஸ்ரேயஸ் ஐயர் இரண்டு போட்டியில் 5 இடத்திலும் ஒரு போட்டியிலு 6 இடத்திலும் ஆடினர், இப்படி கம்பீரின் பிடிவாதம் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணமாக இருந்தது.
இது மட்டுமில்லாமல் பார்ட் டைம் பந்து வீச்சாளர்கள் ட்ரை பண்றேன்று தனது போக்குக்கு கில், ரோகித், பாரக்ன்னு பவுலர்களை பயன்படுத்தியது எதுவுமே எடுப்படாமல் போனது, அணி செலன்சனில் இருந்து, பிளேயிங் லெவன் தேர்வு வரை ரோகித்தை சரியாக செயல்படாமல் தடுத்தது இந்த தொடரின் மூலம் அப்பட்டமாக தெரிகிறது.
வரும் காலங்களில் ரோகித் சர்மா மாதிரி நல்ல கேப்டனை கம்பீர் சரியாக பயன்படுத்தமல் போனால் வரும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை இந்தியா வெல்வது கடினம் தான்.