Ricky Ponting on Gambhir : ”இந்தியா தோற்கும்..காரணம் கம்பீரா?” கொளுத்தி போட்ட பாண்டிங்

Continues below advertisement

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார், மேலும் ரிக்கி பாண்டிங்கின் இந்த கருத்துக்கு இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் தான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பெற்றதில் இருந்து இந்திய அணியை பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் தேர்வு, அணியில் பேட்டிங் ஆர்டரை மாற்றுவது இப்படி பல மாற்றங்களை செய்து இந்திய அணியை செயல்பாட்டில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. 

சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்தது, இந்த தொடரை இந்திய அணிக்கு இழந்தற்கு முக்கிய காரணமே பயிற்சியாளர் கம்பீர் தான் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். 

அந்த தொடரில் அவர் செய்த பேட்டிங் மாற்றங்க, பார்ட் டை பவுலிங் ஆப்சன்ஸ் இது சுத்தம எடுப்படவில்லை, நல்லா இருந்த டீமை இப்படி பண்ணிட்டீங்களே என்ற ஆதங்கம் ரசிகர் மத்தியில் எழுந்தது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டிசம்பர் மாதம் நடைப்பெற உள்ள பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா 2-1 கணக்கில் வெல்லும் என்றும் கூறியுள்ளார், மேலும் 2020-21ல் ஆடிய இந்திய அணி இது கிடையாது என்றும் இப்போது உள்ள ஆஸ்திரேலியா அணி பழைய ஆஸ்திரேலியா அணி போல் உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார். 

பாண்டிங்கின் இந்த கருத்துக்கு காரணம் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் தான் என்று ரசிகர் கொந்தளித்து வருகின்றன்ர். அவர் தனது பிடிவாதத்தால் எடுக்கும் முடிவுகள் இந்திய அணியை தான் பாதித்து வருகிறது, புதிய அணியை ரெடி பண்றேன் என்று சொல்லி அணி உடைத்து வீடாதீர்கள் கம்பீர் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram