Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!
ஒப்பனிங் பேட்ஸ்மேன்.. பாஸ்ட் பவுலர் என இளம் வயதில் தன்னுடைய கிரிக்கெட் கேரியரை தொடங்கிய அஸ்வின் ஸ்பின் பவுலர் ஆன கதை சுவாரசியமானது. செயிண்ட் பீட்ஸ் பள்ளியின் நெட்சில் வேகமாக ஓடி வந்து பந்துகளை வீசிக்கொண்டிருந்தார் அஸ்வின், மிகவும் களைப்பாக உணர்ந்த அவர், தன்னுடைய பயிற்சியாளரிடம் சென்று, தான் சிறிது நேரம் ஸ்பின் பவுலிங் செய்யட்டுமா? என்று கேட்டுள்ளார்..
அது தான் அஸ்வின் வாழ்வில் டர்னிங் பாயிண்ட். கோச் தலையை அசைக்க, சுழற்பந்துகளை வீச தொடங்கினார் அஸ்வின். அஸ்வின் கையிலிருந்து ரிலீஸ் ஆன பந்துகள் அனைத்தும், நல்ல FLIGHT உடன், நேர்த்தியான CONTROL- உடன் LAND ஆவதை கண்டு அசந்து போனார் அவருடைய கோச் விஜயகுமார்.
இந்நிலையில் அன்றைய பயிற்சியை முடித்துவிட்டு, மீண்டும் அடுத்த நாள் நெட்சில் பந்துவீச வந்த அஸ்வின் ஓடிவந்து பந்துவீச மார்க் செய்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரை அழைத்த கோச், பாஸ்ட் பவுலிங் வேண்டாம், ஸ்பின் பவுலிங் போடு என்று சொன்னதை கேட்டு ஷாக் ஆனார் அஸ்வின். ஏன் சற்று விரக்தி அடைந்தார் என்று கூட சொல்லலாம். உடனே அஸ்வினின் தந்தை ரவிசந்திரனை அழைத்து விஷயத்தை சொன்னார் கோச் விஜயக்குமார்.
தந்தை ரவிசந்திரன், அஸ்வின் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்று எதிர்பார்த்தார், ஆனால் ஸ்பின் பவுலிங் தான் அஸ்வினின் எதிர்காலத்தையே மாற்ற போகிறது என்று அன்று யாருக்கும் தெரியாது.
தமிழ்நாடு அணியில் பெரிதாக ஆப் ஸ்பின்னர்கள் இல்லாத காலம் அது. ஆனால் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், பத்ரிநாத் என சிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தனர். அதனால் U19ல் பேட்ஸ்மேனாகவே விளையாடிய அஸ்வின், சொடுக்கு பந்துகளை வீச தனியாக பயிற்சிகளை மேற்கொண்டார்.
அஸ்வின் ஒரு குயிக் லர்னர், தன்னுடைய உயரத்தை சரியாக பயன்படுத்தி பந்திலிருந்து பவுன்சை எக்ஸ்ட்ராக்ட் செய்தார். மேலும் நாளுக்கு நாள் புதிய டெக்னிக்குகளை தன்னுடைய பந்துவீச்சில் கொண்டு வந்தார்.
இதனால் 2006ம் ஆண்டு தமிழக ரஞ்சி அணியில் நுழைந்தார் அஸ்வின்.
அடுத்தாக 2008ம் ஆண்டு முதல் முறையாக IPL t20 தொடர் அறிமுகமாகிறது, மஞ்சல் ஜெர்சியில் தோனி எண்ட்ரிக்காக சேப்பாக்கம் தயாராகி கொண்டிருந்தது.. அதே நேரம் இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசி கொண்டிருந்த அஸ்வின் 6 விக்கெட்களை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் வென்றிருந்தார். அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்.. அவருக்கே உரித்தான பாணியில் “டேய் அஸ்வினு.. பார்த்தேண்டா.. செமைய்யா பந்துவீசின டா.. அணிருதா எப்போதுமே சொல்லுவான் டா.. நீதான் பெஸ்ட்ன்னு.. கலக்கணும் சரியா.. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு போய் பின்னிடனும்.. முத்தையா முரளிதரன் கிட்ட இருந்து புல் ஜூஸ் உரிஞ்சிடு..”
இதை கேட்ட அஸ்வின் வெடவெடத்து போனார்.. ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் எடுக்கபட போவதை அஸ்வின் கனவில் கூட நினைத்துபார்க்கவில்லை.
அடுத்ததாக சிஎஸ்கேவின் இன்றைய CEO காசி விஸ்வநாதனை பார்த்த கிருஷ்னமாசாரி ஸ்ரீகாந்த், என்ன காசி எடுக்கலையா என்று கேட்டார். அந்த ஒரு வார்த்தை அஸ்வினின் தலையெழுத்தை மாற்றியது.
அடுத்த நாளே சென்னை அணியின் காண்டிராக்ட் அஸ்வினுக்கு கிடைத்தது. தோனியின் டிரஸ்ஸிங் ரூம்.. சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார் அஸ்வின் என்றே சொல்லலாம்.
அப்போது ஒரு நாள் பிரஸ் கான்பிரன்சை முடித்துக்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகளுடன் வந்து கொண்டிருந்தார் தோனி, அவரிடம் நேராக சென்ற N ஸ்ரீனிவாசன், அஸ்வின்னு ஒரு பையன் இருக்கான், ஆப் ஸ்பின் போடுவான்.. தமிழ்நாடு டீம்க்கு நல்லா பண்ணிட்டு இருக்கான். ஒருமுறை நீங்க அஸ்வின் பந்துவீசுறதை பாக்கணும் என்று தெரிவித்தார்.
உடனே சரி சார் நான் பாக்குறேன் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார் தோனி.
அதற்கு அடுத்த சீசன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய அஸ்வின் 4 ஓவர்களை வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அங்கிருந்து அஸ்வினின் ஆட்டம் தொடங்கியது. ஒப்பனிங் ஓவரில் ஸ்பின்னரா என்று ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளும் வாய் பிளக்கும் வகையில், கிரிஸ் கையில் நிற்கும் போது அஸ்வினுக்கு பந்தை கொடுத்து விக்கெட்டை தூக்கினார் தோனி.
லெப்ட் ஹாண்ட் பேட்ஸ்மேன்களை கட்டம் கட்டுவதில் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்தார் அஸ்வின், அப்டியே இந்திய அணியின் கதவுகள் திறந்தது.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் விக்கெட்களை வீழ்த்தி, தன்னால் டிசெண்டாக பேட்டிங்கும் ஆட முடியும் என காட்டினார் அஸ்வின். அதனால் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றார் அஸ்வின். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டியில் வாட்சன் விக்கெட்டை அஸ்வின் தூக்கியதை யாரும் மறக்க முடியாது.
தற்போது தான் இந்திய அணியில் ஒரு சிக்கல் வர தொடங்குகிறது, ஹர்பஜன் சிங்கா இல்லை அஸ்வினா? ஒரு ஆப் ஸ்பின்னர் தான் ஆட முடியும், அதனால் ஹர்பஜன் விளையாடட்டும் என்று அணி நிர்வாகம் முடிவெடுக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தோனி, கடந்த சீரிஸில் அஸ்வின் தான் ஆட்டநாயகன், அவரை என்னால் நீக்க முடியாது என்று நிர்வாகத்துடன் சண்டை போட்டு, அஸ்வினை டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கிறார். ஹர்பஜன், அஸ்வின் என இரண்டு ஆப் ஸ்பின்னர்களையும் ஆட வைத்தார் தோனி.
அப்போது தான் வந்தது 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஓப்பனிங்கில் ரோகித், தவான் என புதிய இளம் வீரர்களை இங்கிலாந்து ஆடுகளங்களில் இறக்கியது இந்தியா. அதுமட்டுமின்றில் சுழலுக்கு பெரிதாக கைக்கொடுக்காத இங்கிலாந்து ஆடுகளங்களில், அஸ்வின் ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்களையும் களமிறக்கினார் தோனி.
அதனால் இந்திய அணிக்கு வாய்பில்லை என்று நினைத்த ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பார்க்கும் வகையில், ஹோம் டீமான இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்தியது இந்தியா.
குறிப்பாக பைனலில், கடைசி ஓவர் 15 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், கடைசி ஓவரை வீசி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தார் அஸ்வின்.
700க்கும் அதிகமான விக்கெட்களை சர்வதேச கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ள அஸ்வின் கேரியரை எடுத்து பார்த்தால் நிச்சயம் ONE OF THE GREAT என்ற பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெற்றிருந்தாலும், சென்னை அணிக்கு அடுத்த 3 சீசனும் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விஷயமாக அமைந்துள்ளது.