Prakash raj on Jay shah : வாழ்த்து சொன்ன விராட்! கலாய்த்த பிரகாஷ்ராஜ் ”ALL Rounder ஜெய்ஷா”

இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டர் ஐசிசியின் தலைவராகியுள்ளார்,அவரை வாழ்த்துவோம் என்று பிசிசிஐ தலைவராக தேர்தேடுக்கபப்ட்டுள்ள ஜெய் ஷா குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலாக தெரிவித்தது பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் ஆளும் பாஜக அரசு குறித்து  தொடர்ந்து  கடுமையாக விமர்சனங்களை முன்னெடுத்த  வருகிறார், பிரதமர் மோடி குறித்தும்  அவ்வப்போது தனது விமர்சனத்தை எடுத்து வைப்பார். 


தற்போது ஐசிசியின் தலைவராக உள்ள கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஐசிசியின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராரும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா போட்டியின்றி ஐசிசியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐசிசியின் தலைவராக தேர்ந்தடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ஐசிசியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளரான ஜெய் ஷாவை கைத்தட்டி பாராட்டுவோம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துகள்” என பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் ஜெய் ஷா  குறித்து  கிண்டலாக  பதிவிட்டதால் அவரை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola