MS Dhoni | Suspense வைக்கும் பிசிசிஐ.. மிக்சருடன் காத்திருக்கும் CSK.. தோனி IN or OUT

ஐபிஎல் 2025 தொடருக்கான சிஎஸ்கே அணியில்  நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்க சென்னை  அணி முடிவு செய்துள்ள நிலையில் தன்னுடைய இடத்தையே சென்னை அணிக்காக தியாகம் செய்ய சென்னை அணி முன்னாள் கேப்டன் தோனி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைப்பெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தாக்க வைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இருப்பினும் சில அணிகள் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ள பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 
பிசிசிஐயும் ஐந்து வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ள பரீசிலினையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

அப்படி ஒருவேளை பிசிசிஐ நான்கு வீரர்கள் தக்க முடியும் என்று அறிவித்தால் 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகிய நான்கு வீரர்களை மட்டுமே அந்த அணி தக்க வைக்கும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறிய தோனி, ஒரு வீரராக மட்டுமே விளையாடி வந்தார். அவருக்கு ஏற்கெனவே காலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக பேட்டிங் ஆர்டரில் பின் வரிசையில் இறங்கி ஆடினார். 

இதனால் அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அதற்கான பதிலை அவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் ஐந்து வீரர்களை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே தன்னை சிஎஸ்கே அணியில் தக்க வைக்குமாறு தோனி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் என்னவென்றால் தோனியின் வயது தான், தோனியால் நீண்ட நேரம் ஆட  முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே அணியில் ருதுராஜ், டுபே, பதிரனா போன்ற இளம் வீரர்கள் உள்ளதால் தன்னுடைய இடத்திற்காக ஒரு இளம் வீரரின் இடத்தை வீணாக்க விரும்பவில்லை என்று அணி நிர்வாகத்திடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு வேளை அணியில் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்றால் மட்டுமே தோனி அணியில் தக்க வைத்துக்கொள்ளப்படுவார் அதுவும் இம்பேக்ட் ப்ளேயராக மட்டுமே ஆடுவார் என்று தெரிகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola