Virat Kohli Stump Mic: ‘ஆடு இல்ல..சிங்கம்’பொல்லார்டுக்கு சவால் விட்ட கோலி!

Continues below advertisement

Virat Kohli Stump Mic: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாது டி20 போட்டியில், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் விராட்கோலி. இவர் கடந்தாண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர் அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்த கோலி கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு, தனது டெஸ்ட் கேப்டன்சியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, விராட் கோலி - ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியின்போது ரோஹித் ஷர்மாவை பற்றி விராட் கோலி பேசியது மைக்கில் பதிவாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram