IND vs PAK Match Highlights : பாக். -கை புரட்டி எடுத்த பும்ரா இந்தியா த்ரில் வெற்றி

Continues below advertisement

கடைசி நேரத்தில் பாகிஸ்தானை மீண்டும் உலகக் கோப்பையில் சரித்த இந்தியா அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 19 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள். இதில் 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற விராட் கோலி 1 பவுண்டரி மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் ஷர்மாவும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 13 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்து இருந்தது.

அப்போது களத்தில் இருங்கிய ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்தார் அக்ஸர் படேல். மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 20 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

அக்ஸர் படேல் விக்கெட்டுக்கு பிறகு களம் இறங்கியா சூர்யகுமார் யாதவ் 8 பந்துகள் களத்தில் நின்று 1 பவுண்டரி  யுடன் 7 ரன்கல் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பண்ட்  விக்கெட்டை பறிகொடுத்தார்.மொத்தம் 31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா டக் அவுட் ஆகி வெளியேற ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் நடையைக் கட்டினார்.

17.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய அர்ஸ்தீப் சிங் 9 ரன்களும் முகமது சிராஜ் 7 ரன்களும் எடுக்க 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது.. பாகிஸ்தான் அணி 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய முஹமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்படி 10 பந்துகள் களத்தில் நின்ற பாபர் அசாம் 13 ரன்கள் எடுத்தார். அடுத்தாக களம் இறங்கிய உஸ்மான் அலியும் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் முஹமது ரிஸ்வான்.

இதனிடையே களம் இறங்கிய பாஹர் ஷமான் 13 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் விக்கெட்டை இழந்தார். இச்சூழலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஹமது ரிஸ்வான் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 44 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 31 ரன்கள் எடுத்தார். பின்னர் இமாத் வசீர் உடன் ஜோடி சேர்ந்தார் ஷதாப் கான். ஆனால் இவர்களது ஜோடி வந்த நிமிடத்திலேயே பிரித்தார் ஹர்திக் பாண்டியா. ஷதாப் கான் 4 ரன்களில் நடையைக்கட்டினார். அடுத்து வந்த இப்திகார் அகமது 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram