IND vs SA 1st ODI: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இவர் தான்.. இந்திய அணியின் பிளேயிங் 11
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIND vs SA 1st ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, கே.எல். ராகுல் ஆன்லைனில் பேசினார். அப்போது, ரோகித் இல்லாததால் அவர் இடத்தில் தான் இறங்குவேன் என்பதை உறுதிப்படுத்தினார் இதுதொடர்பாக கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், ‘கடந்த 14-15 மாதங்களில் நான் 4, 5, வெவ்வேறு நிலைகளில் பேட்டிங் செய்தேன். தற்போது ரோகித் சர்மா இல்லாததால், நான் ஓப்பனிங் பேட்டிங் செய்வேன். நான் நிறைய திட்டங்களையும் இலக்குகளையும் கொண்டவன் அல்ல. நான் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டும் ஆட விரும்புகிறேன். அப்படித்தான் நான் எனது கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். அப்படித்தான் அணியை வழி நடத்த நான் பார்ப்பேன். விராட் கோலி மற்றும் தோனியிடம் கற்றுக்கொண்ட அனைத்தையும் அணியை வழிநடத்த பயன்படுத்துவேன். தோனி மற்றும் விராட் கோலி போன்ற சிறந்த கேப்டன்களின் கீழ் நான் விளையாடியுள்ளேன். அணிக்கு கேப்டனாக இருக்கும்போது, அவர்களிடம் கற்றதை பயன்படுத்துவேன் என்று நம்புகிறேன். நான் தவறுகளைச் செய்வேன். ஆனால் நான் கற்றுக்கொண்டு சிறப்பாக வருவேன். விராட் கோலி ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளார். இது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று, கேப்டனாக என்னால் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.