ICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERS

Continues below advertisement

சொக்கர்ஸ் என்ற பட்டத்துடன் உள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகுய  இரண்டு அணிகள் இன்று ஐசிசி மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்றிரவு மோதவுள்ளன. 

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 3தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் இரண்டு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதியில் மோதின. முதலாவது அரையிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 
அதே போல இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இன்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதுமட்டுமில்லாமல் இது வரைக்கும் இறுதிப்போட்டிக்கு நுழையாத இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது

சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் தென் ஆப்ரிக்கா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது.

6 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும் இரண்டு முறை சாம்பியன் ஆன மேற்கு இந்திய தீவுகள் அணிகள் அணியும் தொடரில் இருந்து வெளியேறிய உள்ள நிலையில் புதிய சாம்பியன் யார் என்ற  எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram