Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

Continues below advertisement

ருதுராஜ் கெய்வாட்டை இந்தியன் டி20 டீம்ல எடுக்கல என்று கோச் கவுதம் கம்பீரை ரசிகரகள் பயங்கரமா திட்டித்து இருக்கிற நிலையில் கவுதம் கம்பீர் ருதுராஜூக்கு வேற ஓரு மாஸ்டர் பிளான் வச்சு இருக்கிறாத இப்போ ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டி20  தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர் ருதுராஜ்  கெய்க்வாட் பெயர் அணியில் இடம்பெறவில்லை. நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ருதுராஜை கோச் கம்பீர் வேண்டுமென்றே அணியில் எடுக்காமல் உள்ளார் என்ற விமர்சனத்தை எடுத்து வைத்தனர்.

இப்படி நல்ல ஆடுற ருதுராஜை ஏன் அணில எடுக்க மாட்டிறீங்க கம்பீரை ரசிகர்கள் வருத்தெடுத்து வந்தனர். ஆனால் ருதுராஜை சேர்க்காமல் இருப்பதற்கு பின்னால் கம்பீரின் ஒரு மாஸ்டர் பிளான் உள்ளதாக கூறப்ப்டுகிறது. அது என்னவென்றால் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியின் மூன்றாவது ஒப்பனராக ருதுராஜை களமிறக்க பயிற்சியாளர் கம்பீர் பிளான் போட்டு வைத்துள்ளார்.  இதனால் தான் அவரை உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஆடும்படி கம்பீர் சொன்னதாக தெரிகிறது. 

இதனால் அவரை துலீப் ட்ராபியில் இந்தியா சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் அவரது அணி இரண்டாம் பிடித்தது. தற்போது துலீப் ட்ராபி தொடரில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கான கேப்டனாக ருதுராஜ்  நியமிக்கபட்டுள்ளார். 

இதானல்  கம்பீர் ருதுராஜை தொடர்ந்து ரெட் பால் கிரிக்கேட் போட்டிகளில் கவனம் செலுத்த கூறியதாக இதிலிருந்து தெரிகிறது. ஆஸ்திரேலியா தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பேக் ஆப் ஆப்சனாக ருத்துவை கம்பீர் வைத்துள்ளதால் கம்பீரை திட்டிய ரசிகர்கள் தற்போது கம்பீரை கொண்டாடி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram