CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனி

Continues below advertisement

பிரோவோ போன என்ன, நாங்க அதை பெரிட ஸ்கெட்ச் ஒன்னு போட்டு இருக்கோம், அவர மட்டும் பவுலிங் கோச்சா ஓகே பண்ணிட்ட 2025 ஐபிஎல் கப் நமக்கு தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு லெஜ்ண்ட்ரி பவுலரை பவுலிங் கோச்சா நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட சிறந்த ஆல் ரவுண்டரா, நல்ல பவுலிங் கோச்சா இருந்த வெஸ்ட் இண்டீயன் லெஜண்ட் டிவைன் பிராவோ கொல்லகத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மெண்டராக நியமிக்கபட்டுள்ளார். டிவைவன் பிராவோ சிஎஸ்கே அணியில் இருந்து விலகியது சென்னை அணி ரசிகர்களை சோகத்தில்  ஆழ்த்தியது. 

டிவைன் பிராவோ சென்னை அணி பவுலிங் கோச்சா இருந்த சமயத்தில் தான் சென்னை அணியின் லோக்கல் பவுலர்களான துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் இந்த மாதிரியான பவுலர்களுக்கு வித்தையை கத்துக்கொடுத்த பிராவோவின் இடத்தை நிறப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில் பிராவோவின் இடத்துக்கு யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிற நிலையில் இரண்டு லெஜண்ட்ரி பவுலர்களிடம் சிஎஸ்கே அணி நிர்வாகம் பேசி வருவதாக இப்போ தகவல் வெளியாகி இருக்கு. 

அதுல் ஒருத்தர் யாருன்னா இப்போ மும்பை இந்தியன்ஸ் ஓட பவுலிங் கோச்சா இருக்கிற லசித் மலிங்காவும் சன் ரைசர்ஸ் அணிக்கு பவுலிங் கோச்சாக இருக்கின்ற டேல் ஸ்டைன். 

குறிப்பா சென்னை அணி மலிங்காவை எப்படியாவது பவுலிங் கோச்சா கொண்டு வர வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. ஒரு மலிங்கா இல்லை என்றாள் டேல் ஸ்டைனிடமும் பேச சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


டி20 போட்டிகளில் முக்கியமான ஒன்று டெத் பவுலிங் தான், அதில் கைத்தேர்ந்த இருவரிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் பேசி வருகிறது சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram