வாய்ப்பு தராத ஆண்கள் அணி இந்திய மகளிர் அணியின் சிற்பி யார் இந்த அமோல் முசும்தார்? REAL LIFE BIGIL | Amol Anil Muzumdar

Continues below advertisement

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்ததுள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னால், அதிகம் பேசப்படாத ஒரு மனிதர் இருக்கிறார். அவர் தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முசும்தார். அவர் யார்? இந்த வெற்றியில் அவரது பங்கு என்ன? 

அமோல் அனில் முசும்தார் (Amol Anil Muzumdar) ஒரு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இந்தியாவிற்காக விளையாட முடியாமல் போன ஒரு வீரர், பயிற்சியாளராக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது அவரது வாழ்க்கைப் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டில் ஒரு தனிப்பெரும் ஜாம்பவான் 21 ஆண்டுகள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, ரஞ்சி டிராபியில் 11,167 ரன்களுக்கு மேல் குவித்தார். ஆனால், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்தில், இவருக்கு இந்திய அணிக்காக ஒருமுறை கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தனது ஆட்டத்திறமைக்காக இந்திய கிரிக்கெட்டின் Unlucky Legend என்று அழைக்கப்பட்டவர். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் தலைமைப் பயிற்சியாளரான அமோல் முசும்தாரின் பங்கு மிகவும் முக்கியமானதாகவும் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடரின் ஆரம்பம் இந்திய அணிக்குச் சவாலாக இருந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளிடம் அடுத்தடுத்த தோல்விகள். அணியில் சோகம் சூழ்ந்தது. ஆனால், இங்குதான் அமோல் முசும்தாரின் பங்களிப்பு இந்திய அணிக்கு உந்துசக்தியாக இருந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரே,  தெரிவித்தாவது இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் அவர் கொத்த ஆவேசமான மோடிவேஷன் ஸ்பீச் கொடுத்தார். அவரது வார்த்தைகள் மனதிலிருந்து வந்தன, நாங்கள் அதை முழுமையாக நம்பினோம். அதுவே அணியௌ மீண்டெழ முக்கியக் காரணமாக அமைந்தது. அவரது வழிகாட்டுதல் வீரர்களுக்கு மன உறுதியை அளித்து, "வெற்றிகரமாக முடிப்போம் We finish well என்ற மந்திரத்தை மட்டுமே கொடுத்தார் என்று தெரிவித்தார்.

அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்சை மூன்றாவது இடத்தில் களமிறக்கியது போன்ற முக்கியத் தந்திர முடிவுகளை எடுத்தார். மேலும், அணிக்கு Fielding and Fitness-ல் அதிக கவனம் செலுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். இதுவே இறுதிப் போட்டியை நோக்கிய வெற்றியின் உந்துசக்தியாக மாற்றியுள்ளது.

இந்தியாவிற்காக விளையாட முடியாமல் போன ஒரு வீரர், இன்று இந்தியாவிற்கு முதல் மகளிர் உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த பயிற்சியாளராக உயர்ந்துள்ளார். இது வெறும் கிரிக்கெட் வெற்றி மட்டுமல்ல இது நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் Personal Redemption பற்றிய ஒரு கதை. அமோல் முசும்தார் இதை இந்திய கிரிக்கெட்டின் நீடித்த தாக்கம் ஏற்படுத்தும் ஒரு தருணம் என்று அமோல் அனில் முசும்தார் கூறியுள்ளார். ஓர் உள்ளூர் ஜாம்பவானின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய மகளிர் அணி உலக சாம்பியனாக மாறியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola