Biriyani Man Issue Update|BIRIYANI MAN மீண்டும் கைது!சாட்டையை சுழற்றும் போலீஸ்..பாயும் அதிரடி வழக்கு

பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தின் வரும் அபிஷேக் ரவி என்பவர் தனது யூடியூப் சேனலில் பெண்களை இழிவாக பேசிய நிலையில் அவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்த நிலையில், மாற்று மதத்தினரை இழிவாக பேசியதாக   மேலும் ஒரு வழக்கில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பெண் யூடியூபர்களை பற்றி, பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.. இர்ஃபானின் குழந்தையை குறிப்பிட்டு பேசியது, உருவக்கேலி செய்தது என பிரியாணி மேன் பேசியவை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் தயாளு டிசைன்ஸ் என்ற பேஜ் மூலம் டெய்லரிங் மற்றும் பேசன் டிசைனிங் பற்றி பேசிவருபவர் மீதும் விமர்சனங்களை முன்வைத்ததற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் ஜூலை 29-ஆம் தேதி பிரியாணி மேன் சேனலை நடத்திவரும் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் இருக்கும் பிரியாணி மேன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாற்று மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அவர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அவர்  மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சைபர் கிரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே தன்னுடைய யூடியுப் பக்கத்திக் மற்றவர்களை பற்றி தவறாக பேசுவது மட்டுமல்லாமல் லைவ் வீடியோவிலேயே தற்கொலைக்கு முயன்றது என அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola