வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

Continues below advertisement

வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஃபு குவோக் தீவு. இந்த நிலையில், 
இத்தீவு அருகே ஓஷன் பேர்ல் ஐலேண்ட் கம்பெனியால் இயக்கப்படும் அதிவேக சுற்றுலாப் படகு ஒன்று, உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணியளவில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 36 பேருடன், ஹான் மே ரட் தீலிருந்து, அன் தோய் துறைமுகத்திற்குப் புறப்பட்டது.

அப்போது, கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த படகு, கடலில் வீசிய பலத்த காற்று மற்றும் பெரிய அலைகள் காரணமாக திடீரென தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் படகில் பயணித்த பெரும்பலானோர் கடலில் வீசப்பட்டனர். சிலர் படகிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

விபத்தைக் கண்ட அருகிலிருந்த சுற்றுலாப் படகு நடத்துநர்கள், உடனடியாக படகு கவிழ்ந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அனைவரையும் மீட்க முடிவியவில்லை. 32 இந்திய சுற்றுலாப்பயணிகளில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் மொத்தம் 19 தமிழர்கள் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், அதில் முருகபிரபு, செந்தில்குமார், ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, வினைகுமார், ரவிசங்கர், சந்தோஷ் குமார், பாலாஜி, பாபு, அழகுராஜ் ஆகிய 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரும், கேரளவைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்களையும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், தூதுரகாம் மூலம் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து, "பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட  இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola