
JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?
நீ ஒரு ஹிட்லர்.. மக்களால் கண்டிக்கப்பட வேண்டியவர்.. முட்டாள் என்று வாய்க்கு வந்தபடி டொனால்ட் ட்ரம்பை விமர்சித்தவர் தான் இன்றைக்கோ ட்ரம்பின் வலது கரம்.. “இனி உங்களை MR. Vice President "என்று தான் அழைப்பேன் என்று ட்ரம்ப் சொல்லும் அளவிற்கு வளந்து நிற்கிறார் இந்தியாவின் மாப்பிள்ளை, அமெரிக்காவின் துணை அதிபர் JD வான்ஸ்...
நேற்று சோசியல் மீடியாவை முழுமையாக ஆக்கிரமித்து இருந்ததது ட்ரம்ப் பதவியேற்பு விழா.. அதற்கு அடுத்தபடியாக இருந்தது தன் கணவர் துணை அதிபராக பொறுப்பேற்பதை கியூட்டாக ரசித்த ஒரு பெண்மணியின் வீடியோ தான். அந்த நபர் வேறு யாரும் இல்லை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அவருடைய மனைவி உஷா வான்ஸ். 3 குழந்தைகளுடன் வான்ஸ் தம்பதியினர் பதவியேற்பு மற்றும் அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, அவர்களுடைய சிறு குழந்தைகள் குறும்பாக சேட்டைகள் செய்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.. அதற்கு காரணம் ஜேடி வான்ஸ் ஒரு இந்திய மாப்பிள்ளை என்பதால், யார் இவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
JD வான்ஸ் மனைவி உஷா சிலிக்குரி ஆந்திர பிரதேசத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் 1980 காலக்கட்டத்தில் தொழில் முன்னேற்றதிற்காக அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்கள். உஷா அமெரிக்காவில் பிறந்தவர் தான். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த உஷாவை ஜேடி வான்ஸ் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஜேடி வான்ஸ் பிறந்த காலக்கட்டத்தில் அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தது. தாயும், தந்தையும் ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்து பிரிந்தனர். தாய் போதைக்கு அடிமையானார், இதனால் பெறும்பாலும் வான்ஸ் தன்னுடைய தாத்தா பாட்டியுடனேயே வளர்ந்தார். வறுமையான சூழலிலும் பேரனை எப்படியாவது படிக்க வைத்து எல்லோரும் மதிக்கும் ஒரு ஆளாக மாற்ற வேண்டும் என்று நினைத்தனர். கிடைத்த வறுமானத்தை எல்லாம் ஜேடியின் கல்விச் செலவிற்கு அவரது குடும்பம் பயன்படுத்தியது. குடும்பத்தின் வறுமையை புரிந்து கொண்ட ஜேடி வெறி கொண்டு படித்தார். அதனால் தன் பாட்டியின் மீது நீங்காத ஒரு தனிப்பட்ட அன்பை கொண்டிருந்தார் வான்ஸ்.
பள்ளி படிப்பை முடித்த அவருக்கு, US Marine corps-ல் இடம் கிடைத்தது. எழுத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த JD 2005 ஆம் ஆண்டு ஈராக் போரில் பங்கேற்க அனுப்ப பட்டார். அவருக்கு அங்கிருந்து செய்திகளை சேகரித்து அமெரிகாவிற்கு அனுப்பும் பொறுப்பு வழங்கப்பட்டது, அதனை திறம்பட செய்தார் அவர். வேலையை முடித்துக் கொண்டு அமெரிக்க திரும்பியதும் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், யேல் சட்டப் பள்ளியில் சட்டத்துறை பட்டமும் பெற்றார்.
இதன் விளைவாக வழக்கறிஞரானர். இந்த பணியை செய்து கொண்டே எழுத்தாளராகவும் ஒரு பக்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
2016ம் ஆண்டு ஹில்லிபில்லி எலேஜி.. நெருக்கடியில் வாழும் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தின் நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதினார் JD. இது மிக பெரிய ஹிட்டானது. அரசியல் விமர்சகராக தொலைகாட்சிகளில் பேசவும், கல்லூரிகளில் லெக்சரராக பணியாற்றவும் வான்ஸுக்கு வாய்ப்புகள் குவிந்தன. பின்னாளில் அவருடைய புத்தகம் நெட்பிளிக்ஸில் வெளிவந்தது..
அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்டதால் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்.
அந்த சமயங்களில் டொனால் ட்ரம்பை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசியதன் மூலம் அமெரிக்க முழுவதும் JD vance குரல் ஒலிக்க தொடங்கியது. 2016 தேர்தலுக்கு முன்பாக பேசிய வான்ஸ் “அமெரிக்காவில் பணிபுரியும் வெள்ளையர்கள் அனைவரையும் டிரம்ப் இருளில் தள்ளிவிடுவார் என்று அஞ்சுவதாக JD பேசி இருந்தார். இவருடைய மனைவி உஷா வான்ஸும் ட்ரம்பிற்கு எதிரான நிலைபாட்டில் தான் இருந்தார்.
2018ம் ஆண்டு அமெரிக்க செனேட் பதவிக்கான ரேஸில் முதலில் பங்கேற்றிருந்த வான்ஸ், பின்பு இது சரியான நேரம் இல்லை என்று அதிலிருந்து விலகிக்கொண்டார்.
இந்நிலையில் தான் ஒஹியோ மாகாணத்தின் செனேட் பதவிக்கான தேர்தல் ரேஸில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய வான்ஸ், பொதுவெளியில் டிரம்ப் குறித்தான விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்டார்.
2022ம் ஆண்டு தேர்தலில் டிரம்பின் முழக்கமான Make america great again என்ற கொள்கையை வீரியமாக கையிலெடுத்த வான்ஸ், ஒஹியோ மாகாணத்தில் வெற்றியை தன்வசப்படுத்தினார். அதன் காரணமாக குடியரசு கட்சியின் முன்வரிசையில் வான்ஸுக்கு இடம் கிடைத்தது..
இச்சூழலில் ட்ரம்பை முதலில் எதிர்த்த ஜேடி வான்ஸ் பின்னர் அவரது கொள்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு, அவரின் தீவிர ஆதரவாளராக களத்தில் நின்றார். இந்த நிலையில் தான் கடந்த 2024 ஜூலையில் வான்ஸை துணை அதிபராக அறிவித்தார் டிரம்ப்.
அந்த வகையில் தான் தன்னுடைய 40வது வயதில் அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இதன் மூலம் இந்திய- அமெரிக்க உறவு நன்றாக இருக்கும் என்று உஷாவின் பாட்டி இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மருகனை நாமும் வாழ்த்துவோம்.