இடத்தை காலி செய்ய மறுத்த பெண் - வழியில்லாமல் வீட்டைச்சுற்றி பாலம் கட்டிய சீனஅரசு
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், குவாங்சு பகுதியில் உள்ள அந்தப்பெண்ணின் வீடு இருக்கும் பகுதியில் மட்டும், சுற்றிச் செல்லும் படி பாலத்துடன் சாலையினை கட்டியுள்ளனர். சீனாவில் சமீபத்தில் இந்தச் சாலைக்கு திறப்பு விழா நடைபெற்றதோடு அந்த வீடு இருக்கும் பகுதிக்கு நெயில் ஹவுஸ் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலைக்கு நடுவே அமைந்துள்ள இந்தச் சிறிய வீட்டினைப்பார்ப்பதற்காக மக்கள் அவ்வழியாக பயணம் செய்கின்றனர். பலரும் ஏன் இந்தப் பெண் இடத்தினைக் கொடுக்க மறுத்துவிட்டார்? என்பது போன்ற பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதற்குப் பதிலளித்த லியாங் என்ற பெண், தற்பொழுது சுற்றுச்சூழல் பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருந்தாலும், எனக்குப்பிடித்த வீட்டில் சந்தோஷமாக, சுதந்திரமாக வசித்து வருகிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கேட்ட இடத்தினை சீன அரசு வழங்க மறுத்துவிட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.