Taliban vs Pakistan Army | ‘’ஆம்பளையா இருந்தா வாடா” ராணுவ தளபதிக்கு மிரட்டல்தாலிபன் வெளியிட்ட வீடியோ
தெஹ்ரீக் - இ - தாலிபன் பாகிஸ்தான் அமைப்பின் தளபதியான காஜிம் குறித்து தகவல் தெரிவித்தால், பாகிஸ்தான் மதிப்பில் ரூ.10 கோடி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையேயான, எல்லை தாண்டிய மோதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனிரை மிரட்டி தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோக்களில், பாகிஸ்தான் ராணுவம் மரணத்தை நோக்கி வீரர்களை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக உயர் அதிகாரிகளே தங்களை போர்க்களத்தில் முதல் நபராக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் TTP-யின் தளபதி, அசிம் முனிரை மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காணொளிகளில் அக்டோபர் 8 ஆம் தேதி கைபர் பக்துன்க்வாவின் குர்ராமில் நடந்த தாக்குதல் பற்றிய போர்க்களக் காட்சிகளும் உள்ளன. அந்த தாக்குதலில் 22 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக TTP அறிவித்துள்ளது. ஆனால் அந்த தாக்குதலில் 11 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















