ABP News

Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்

Continues below advertisement

கடந்த 286 நாட்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்பினார். இந்த நிலையில் அவர் விண்வெளியில் இருந்து புறப்பட்டதில் இருந்து பூமிக்கு  திருமியது வரை என்ன நடந்து என்பதை பார்ப்போம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டார்கள். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலல் 17 மணி நேரம் கழித்து அதாவது இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் இருக்கும் கடலில் இறங்கி மிதந்தது. 

முன்னதாக வளிமண்டல மறு நுழைவு என்று சொல்லப்படக்கூடிய ஆபத்தான கட்டத்தை கடந்து தான் பூமிக்கு வந்திருக்கிறது. இந்த சமயத்தில் தான் உலகமே கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது. காரணம் வளிமண்டலத்திற்குல் டிராகன் விண்கலம் நுழையும் போது கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இது வழக்காமன நடைபெற என்றாலும் கூட அந்த நிமிடங்கள் அனைவருக்கும் திக் திக் நிமிடங்களாகவே இருந்தது.  இதனிடையே எந்த ஒரு தூண்டுதலும் இன்றி டிராகன் விண்கலம் தானாகவே பூமியை நோக்கி விரைய ஆரம்பித்தது. அதுவும் 100 கி.மீ 200 கி.மீ வேகம் அல்ல சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி விண்வெளியை கிழித்துக்கொண்டு வந்தது. 


பூமியை நெருக்கும் சமயத்தில் விண்கலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு விண்கலத்தில் வேகம் குறைக்கப்பட்டது. அப்போது பாரசூட்டுகள் விரிந்தன. விண்கலம் மெதுமெதுவாக வேகம் குறைத்து கடலில் தொப் என்று விழுந்தது. அந்த நேரம் யாரும் சற்றும் எதிர்பார்க்காதபடி கடலில் இரு ந்த டால்பின்கள் விண்கலத்தை வட்டமிட்ட வரவேற்றது. இது  நாசா விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் விண்கலத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியே கொண்டுவரப்பட்டனர். சுனிதா வில்லியம்ஸ் வெளியே வந்து சிரித்தபடி அனைவரையும் பார்த்து கையசைத்தார்.

இதனிடையே ஒன்பது மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய இவர்களின் அடுத்த கட்டம் என்ன என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் மருத்துவ நிபுணர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.  தற்போது இவர்களின் உடல் புமி யீர்ப்பு விசைக்கு பழக்கப்பட நாட்கள் எடுக்கும். அதற்கான முறையான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola