Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

Continues below advertisement

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்ட 42 பேர் மெக்கா அருகே நடந்த பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நவம்பர் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து 54 பேர் மெக்கா பயனம் சென்றுள்ளனர். அவர்கள் உம்ரா தொழுகை முடித்துவிட்டு நேற்றிரவு மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் அருகே டீசல் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் வெளியேற முடியாமல் பலர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 54 பேரில் 4 பேர் மெக்காவிலேயே இருந்ததாலும், மேலும் 4 பேர் காரில் பயணம் சென்றதாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..மேலும் இந்த விபத்தில் சொயப் என்ற ஒரே ஒரு இளைஞன் உயிர்பிழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சவுதி அரேபியாவில் இந்திய பயணிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola