Russia Ukraine War: கண்முன்னாடியே குண்டுகள்! யாராவது காப்பாத்துங்க!உக்ரைன் தமிழக மாணவர் !

Continues below advertisement

Russia Ukraine War: ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணிநேரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதலாக ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன், ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் வீழ்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram