Mexico Bird Fall from Sky: கும்பலாக இறந்து விழுந்த பறவைகள்..அதிர்ச்சியடைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Continues below advertisement

Mexico Bird Fall from Sky: நூற்றுக்கணக்கான பறவைகள் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோதே திடீரென்று கொத்து கொத்தாக கீழே விழுந்து இறந்த சோகம் மெக்சிகோவில் நடந்துள்ளது. மெக்சிகன் மாநிலமான சிவாவ்வா நகரில் அல்வரோ ஆப்ரெகான் என்ற இடத்தில் சாலையில் பறவைகள் கொத்து கொத்தாக செத்துகிடந்தன. ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கேமரா,ஒரே நேரத்தில் டஜன் கணக்கான பறவைகள் தரையில் விழுவதைப் படம்பிடித்தது. இதுதொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது. நிபுணர்களிடையே கூட குழப்பத்தை உருவாக்கியது. என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தைக் அவர்களால் கண்டுபிடிக்கவில்லை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram