Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி

Continues below advertisement

ஈரானில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கையாள்வது, அரசை பாதுகாப்பது என சக்திவாய்ந்த அமைப்பாக அமெரிக்காவுக்கு பயம் காட்டிய IRGC என்ற இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமையகத்தை ஏவுகணைகளை வீசி துவம்சம் செய்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒன்று இணைந்து, ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், அமெரிகா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் இருக்கிறது. 

கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் 48 ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஈரான் போர்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஈரானின் மிக முக்கிய பாதுகாப்பு அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமையகத்தை தரைமட்டமாக்கியுள்ளது அமெரிக்கா. இதில் முக்கிய நபர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைப்பு கடும் சிக்கலை சந்தித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்க CENTRAL COMMAND வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடந்த 47 ஆண்டுகளாக 1000க்கும் அதிகமான அமெரிக்கர்களை கொலை செய்துள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் பாம்பின் தலை வெட்டப்பட்டுள்ளது. உலகிலேயே வலிமையான ராணுவம் அமெரிக்காவிடம் தான் இருக்கிறது. இனி இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு தலைமையகமே கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRGC-க்கு தனியான ராணுவன், விமானப்படை மற்றும் கடற்படைகள் இருக்கின்றன. இந்தப் படை ஈரான் அரசுக்கு கட்டுப்பட்டு இயங்குவதில்லை. ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்தப் படை இயங்கி வந்தது. பாதுகாப்பை தாண்டி ஈரானின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அளவுக்கு வலிமையான படையாக இருக்கிறது. 1979-ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு ஈரானை காப்பதற்காகவே இந்த படை உருவாக்கப்பட்டது. இந்தநிலையில் தலைமையகத்தை தாக்கி அழித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் IRGC-க்கு வார்னிங் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள் இல்லையென்றால் மரணத்தை தான் எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். 

ஈரானின் மிக முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதும், ஈரானின் முக்கிய படையும் அழிக்கப்பட்டுள்ளதும் ஈரானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola