பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் டாட்டா காட்டி ஆட்சி செய்து வந்த இடதுசாரி கூட்டணியை ஓரம்கட்டிவிட்டு, கேரளாவின் முதல்வர் நாற்காலில் அமர்ந்திருக்கிறார் வி.டீ. சதீசன்.
பாஜகவையும், இடது சாரிகளையும் எதிர்த்து காங்கிரஸ் போட்ட கணக்கை கச்சிதமாக முடித்து ஆட்சியை பிடித்து இருக்கும் விடீ சதீசன் யார்..?
இவர்தான் முதலமைச்சர் என காங்கிரஸ் தலைமையும், ராகுல்காந்தியும் நேரடியாக கை காட்ட காரணம் என்ன...?
இத்தனை ஆண்டுகளாக பினராயி விஜயனுக்கு இருந்த செல்வாக்கு சரிய விடீ சதீசன் கையில் எடுத்த பிம்மாஸ்திரத்தை எது? என்பதை வீடியோவில் பார்க்கலாம்...
கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் 50 ஆண்டுகால இருந்து வந்த திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வச்சி இருக்கு. புதிதாக உருவெடுத்த விஜயின் தவெக கட்சி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி தமிழ்நாட்டோட அரசியல் வரலாற்றையே மாற்றி இருக்கு.
கிட்டத்தட்ட இப்படி ஒரு மாற்றம்தான் கேரளாவிலும் நிகழ்ந்து இருக்கு. கேரள அரசியலில் யாருமே எதிர்பாக்காதவிதமாக மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தனதாக்கி கொண்டது. இடதுசாரிகள் கூட்டணிகள் மற்றும் பிற கட்சிகள் 38 இடங்களில் வென்றன.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் படுதோல்வி அடைய முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, கேரள அரசில் காங்கிரஸின் எதிர்கட்சி தலைவராக இருந்த விடீ சதீசன்தான்.
எர்ணாகுளம் மாவட்டம் நெட்டூரை சேர்ந்த வி.டீ. சதீசன், சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்றதோடு திருவனந்தபுரம் அரசு சட்ட கலூரியில் முதுநிலை சட்ட படிப்பை படித்தார். சட்டம் படிக்க தொடங்கியதில் இருந்தே அரசியலில் ஈடுபாடு காட்டிய வி.டீ. சதீசன் முதன் முதலாக 1996ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். முதல் தேர்தல் தோல்வியை தந்தாலும், கால் நூற்றாண்டாக காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தார் விடீ சதீசன். பரவூர் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு 5 முறையும் வெற்றி பெற்று காங்கிரஸ் வரலாற்றில் தனி வரலாற்றை எழுத தொடங்கினார்.
கட்சியில் வி.டீ.சதீசன் காட்டிய நேர்மையான செயல்கள் அவரை தேசிய தலைமை வரை பேச வைத்தது. குறிப்பாக சொல்லனும்னா, சாதி அரசியலை விடீ சதீசன் தவிர்த்தார். சாதிக்கு முக்கியத்துவம் தரும் செயல்களை ஒதுக்கிய இவர், இந்த சாதியை சேர்ந்தவரை சந்திப்பது, பேசுவது என இல்லாமல் எல்லாரையும் ஒரே பார்வையில் பார்க்க தொடங்கினார். இதோடு இல்லாமல் சிறுபான்மையின மக்களுடன் நெருக்கத்தை அதிகரித்தார். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை நேரடியாக அணுகுவது, அவர்களுடன் எந்த பகட்டும் இல்லாமல் பழகுவது, சாதாரண மக்களும் தன்னை சந்திக்கும் ஒரு எளிமையான அரசியலை முன்னெடுத்தார். இதனால் சிறுபான்மையின மக்களின் ஆதரவு நேரடியாகவே விடீ சதீசனுக்கு கிடைத்தது.
இதன் எதிரொலியாக தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவும் நேரடியாக சதீசன் கூட்டணிக்கு கிடைச்சது. இப்படி காங்கிரஸ்க்கு ஆதரவான அரசியல் ஆட்டத்தை கணக்கு போட்டு நகர்த்திய சதீசன், இன்னொரு பக்கம், சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு முறை அரசை எதிர்த்து குரல் கொடுத்து தன்னை ஒரு தனித்துவமான ஸ்ட்ராங் தலைவராக நிரூபித்தார்.
25 ஆண்டுகால அரசியல் அனுபவம், அதனுடனே இருந்த சட்ட நுணுக்கம், இதற்கிடையேயான மக்களுடன் காட்டிய நெருக்கம் ஆகியவை சதீசனை தானாக அழைத்து சென்று அரியாசன்னத்தில் அமர வச்சி இருக்கு.
கேரள தேர்தலில் 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியதும் யார் முதல்வர் என விவாதம் எழுந்தது. எதிர்கட்சி தல்லைவராக இருந்த விடீ சதீசனும், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் முதல்வர் நாற்காலிக்கு போட்டியிட்டனர். ஆனால் மக்கள் மற்றும் காங்கிரஸ் தலைமையின் கைக்காட்டும் நபராக விடீ சதீசன் இருந்ததால், அவர் கேரளாவின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் மாநில தலைவராகவும், எதிர்கட்சி தலைவராக தனது பணியை சிறப்பாக செய்த விடீ சதீசன், முதல்வராக தனது பணியை மேலும் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையை அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார். இவரது இந்த புதிய ஆட்சி கேரள மக்களின் வளர்ச்சியில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..