Wayand Landslide | எங்கள ஒன்னும் செஞ்சுறாதமண்டியிட்டு கெஞ்சிய மூதாட்டி.. காவல் காத்த யானைகள்!

வயநாடு நிலச்சரிவின்போது அடைக்கலம் தேடி காட்டுக்குள் சென்ற மூதாட்டிக்கும் குழந்தைக்கும் மூன்று காட்டு யானைகள் அடைக்கலம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஜூலை 30 கேரள வரலாற்றில் கருப்பு நாளாக கருதப்படும் அளவுக்கு ஓர் கோர சம்பவம் அரங்கேறியது.. கேரளாவின் முக்கிய நகரமான வயநாட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது.. வரப்போகும் அழிவு தெரியாமல் அப்பகுதி மக்களோ நிம்மதியாய் கொண்டிருக்க..நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

இதில் சிக்கி 310க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலர் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிர்கதியாய் நிற்கினறனர். இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது..

இப்படியான நிலையில் மூதாட்டி ஒருவரின் கண்ணீர் கலந்த நன்றி தான் பார்க்கும் திசையெல்லாம் ஒலித்து வருகிறது..
வரும் துயரம் குறித்து அறியாமல் அன்றிரவு வயநாட்டில் தனது வீட்டில் பேத்தியுடன் உறங்கி கொண்டிருந்தார் மூதாட்டி சுஜாதா..திடீரென நள்ளிரவில் வீட்டுக்குள் தண்ணீர் நுழைய கட்டிலின் மேல் தஞ்சமடைந்துள்ளனர் அந்த அப்பாவி குடும்பம்.. ஆனால் சிறிது நேரத்திலே வீட்டின் கூரை இடிந்து விழ கதறும் பேத்தியை தூக்கிக்கொண்டு காபி எஸ்டேட்டுக்குள் தஞ்சமடைந்துள்ளார் மூதாட்டி சுஜாதா..ஒருவழியாக பேரழிவில் இருந்து தப்பித்த நிம்மதியில் பெருமூச்சு விட்டார்..ஆனால் அந்த நிம்மதி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை..காட்டு யானை கூட்டம் ஒன்று இவர்களை நோக்கி வர..ஓர் கண்டத்தில் தப்பித்து அடுத்ததில் மாற்றிக்கொண்டது போன்ற உணர்வு அவர்களுக்கு,.

பெரிய துன்பத்துக்குப் பிறகு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். யாராவது எங்களை வந்து காப்பாற்றும் வரை எங்களை ஒன்றும் செய்துவிடாதே என யானைகளிடம் மண்டியிட்டு கெஞ்சிக்கேட்டுள்ளார் மூதாட்டி சுஜாதா..

சுஜாதாவை பார்த்து கண்ணீர் விட்ட காட்டு யானை அவர்களை தாக்காமல் விட்டதோடு இரவு முழுவதும் மூதாட்டிக்கும் அவரது பேத்திக்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளது. விடிந்ததும் மீட்பு படையினர் வந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டனர். எந்த சாமி காப்பாத்துச்சோ தெரியல என இந்த சம்பவத்தை ஆனந்த கன்ணீருடன் விவரித்துள்ளார் சுஜாதா..

பேரிடர் காலத்தில் மக்களுக்கு காட்டு யானைகள் பாதுகாப்பு கொடுத்த சம்பவம் கேட்போரை நெகிழ வைத்துள்ளது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola