TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
விழுப்புரம் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு விளக்கு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கும் முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்திலிருந்து பம்மாதிரிபேட்டை வரை செல்லும் 56.(A) அரசு பேருந்தை ஓட்டுனர் குபேர் மற்றும் நடத்துனர் பாலசுந்தரம் இயக்கியுள்ளனர். அப்போது விழுப்புரம் நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் பாலசுந்தரத்திற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது அசோகபுரி பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த வழி சென்ற மேலாண் இயக்குனர் துரைக்கண்ணு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தேநீர் அருந்துவதை பார்த்துவிட்டு இருவரும் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதன் பெயரில் பொது மேலாளர் ஜெய்சங்கர் இருவரையும் மணிடயிட மாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் விழுப்புரம் இரண்டாவது போக்குவரத்து பணிமனையில் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு மின் விளக்கு கோபுரத்தில் மீது ஏறி தற்கொலைக்கும் முயன்றுள்ளனர் அதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்ந்து இருவரும் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார்.
இந்தநிலையில் இருவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.