Loan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPM

செங்கல்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் பெண் தலைவர் மற்றும் பெண் துணைத் தலைவர் நடுரோட்டில் அடித்துக் கொள்ளாத நிலையில் இரு தரப்பிலும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புதிய பேருந்து நிலையம் தொழிற்பயிற்சி நிலையம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அந்த ஊராட்சியில் செயல்பட்டு வருகின்றன. இதில் தலைவராக பரிமளா உள்ளார் துணைத்தலைவராக சத்யா கோபிநாத் உள்ளனர்.

ஒன்பது வார்டுகள் உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் ஆரம்பம் முதலே தலைவர் துணைத் தலைவர் என போட்டோ போட்டி போட்டுக் கொண்டு இவரை அவர் நீக்குவது அவரை இவர் நீக்குவது போன்ற செயல்பாடுகளால் ஊராட்சி நிர்வாகமே முடங்கிய நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது ஊராட்சியில் லட்சக்கணக்கில் நிதி இருந்தும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என துணைத்தலைவர் போர்க்கொடி தூக்கிய நிலையில் நேற்று அலுவலகத்தில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப் போவதாக தெரிவித்தனர். அலுவலகத்தின் எதிரே ரோட்டில் தலைவர் துணைத் தலைவர், இருவரும் மாறி மாறி  குற்றச்சாட்டுகளை அலுவலகத்தில் அடித்துக் கொள்ளாத நிலையில் பேசிக் கொண்டிருந்தனர்.

துணைத் தலைவர் கட்டிங் கேட்பதாக தலைவர் குற்றச்சாட்ட...தலைவர் மீது  பணம் திருடியதாக துணைத் தலைவர் குற்றச்சாட்ட என்று மாறி மாறி பொதுமக்களிடையே குற்றச்சாட்டு வைத்ததால், மேலும் கூச்சல் குழப்பமான நிலையில் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் நடக்காமலே கலைந்து சென்றனர்.

இதனால் ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து சென்ற நிலையில் ஆலப்பாக்கம் ஊராட்சி மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola