திமுக-வோடு கள்ள கூட்டணி கொந்தளித்த CVS ஆதரவாளர்கள் கட்சியிலிருந்தே நீக்கிய EPS

Continues below advertisement

விழுப்புரத்தில் சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகளை இபிஎஸ் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், நீக்கப்பட்ட நிர்வாகிகள் பொதுவெளியில் இனிப்பு வழங்கி கொண்டாடி இபிஎஸ் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பாதிபேர் சட்டமன்றத்தில் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் இபிஎஸ், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து சி.வி.சண்முகத்தை நீக்கி பசுபதி என்பவரை நியமித்தார்.

அதன்பிறகு, விழுப்புரத்தில் பசுபதி தலைமையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் சி.வி.சண்முகம் தரப்பினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், திண்டிவனம், வல்லம் ஆகிய இடங்களில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில் சிவி சண்முகம் தரப்பினருக்கும், பசுபதி தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, பசுபதியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இவ்வாறு விழுப்புரம் அதிமுக-வில் தொடர்ந்து உட்கட்சி மோதல் வெடித்து வரும் நிலையில், சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார் இ.பி.எஸ்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில், நீக்கப்பட்ட நிர்வாகிகள் திண்டிவனம் விருந்தினர் மாளிகை எதிரே ஒன்றுகூடி, "எங்களை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு நன்றி" என்று கூறி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், இபிஎஸ் மற்றும் பசுபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola