Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck
அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில்,அம்பேத்கரை தனது கொள்கை தலைவராக அறிவித்த விஜய் காலையில் இருந்து என்ன செய்துக்கொடிருந்தார், மாலையில் வழக்கம் போல அறிக்கை ஒன்றை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார் என திமுகவினர் மற்றும் விசிகவினர் சமூக வளைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
விஜய் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் அவர் ஒரு முறை கூட மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்ற விமர்சனம் கட்சி தொடங்கிய நாள் முதல் இருந்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் விஜய் களத்திற்கு சென்று ஒரு முறை கூட மக்களை சந்திக்காதது ஆச்சரியமாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே வருத்தம் தெரிவித்து வருகின்றனர். விஜய் சோசியல் மீடியாவில் மட்டுமே கட்சி நடத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தமிழ் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் அரகேறிவுள்ளது. நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள், மாற்றுக்கட்சிகள் என அனைவரும் சீறி பாய்ந்த நிலையில் விஜய் கண் துடைப்பு அறிக்கை மட்டும் விட்டு கட்சி நடத்திவிடலாம் என்று என்ணிவிட்டார் போல. 2026 தேர்தலை சந்தக்கப்போகிறேன் என மாநாட்டில் மார்த்தட்டி சொன்ன விஜய் எந்த சம்பவம் நடந்தாலும் தொடர்ந்து அறிக்கை மட்டும் விடுவது தொடந்து விமர்சனங்கள் வலையில் சிக்கி வருகிறது.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, நேற்றைய தினம் அம்பேத்கர் குறித்து பேசியது, பெரிதும் சர்ச்சையானது. அமித்சா தெரிவித்திருந்ததாவது, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது, தற்போது ஃபேசனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியிருந்தார். அமித்சாவின் இந்த பேச்சானது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் , எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயர் பதிக்கப்பட்ட பலகையை அணிந்தும் கோசங்கள் எழுப்பினர். மேலும் அம்பேத்கரை தனது கொள்கை தலைவராக அறிவித்த விஜய் காலையில் இருந்து என்ன செய்துக்கொடிருக்கிறார் என திமுகவினர் மற்றும் விசிகவினர் சமூக வளைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்தநிலையில் காலையில் நாடாளுமன்றத்தில் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் விஜய் மாலை வழக்கும் போல ஒரு அறிக்கையோடு வந்துள்ளார் என்றும் திமுகவினர் மற்றும் விசிகவினர் விஜயை தாக்கி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்; அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.