Vijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா #Justiceforsangeetha! சுத்துப்போட்ட திமுக..! | DMK
ஏற்கனவே ஏகப்பட்ட கிசு கிசு விஜய்யை சுற்றி கொண்டிருக்கும் நிலையில், இப்போது கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு த்ரிஷாவுடன் ஜோடியாக சென்று சிக்கியுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜையை கடுமையாக சாடி, Justiceforsangeetha என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்
நடிகை த்ரிஷா மற்றும் விஜய் குறித்த கிசு கிசு 'கில்லி' படத்தில் இருவரும் இணைந்து நடித்ததில் இருந்தே தமிழ் சினிமாவில் அவ்வப்போது புகைந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் இருவருமே இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை.விஜய், பல வருடங்கள் த்ரிஷாவுடன் ஜோடி போடாமல் இருந்ததன் காரணம் கூட, விஜய் - த்ரிஷா இடையே இருக்கும் நட்பு எந்த விதத்திலும் தன்னுடைய வாழ்க்கைக்குள் பிரச்சனையாக வந்துவிட கூடாது என எண்ணி, விஜய்யின் மனைவி சங்கீதா தளபதிக்கு போட்ட கண்டீஷன் தான் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 2 வருடமாக தளபதி - சங்கீதா இடையேயான திருமண உறவு சரியாக இல்லை என கூறப்படுகிறது. இது வதந்தி என கூறப்பட்டாலும், இந்த விவாகரத்து வதந்தி எழுந்ததில் இருந்தே சங்கீதா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக வெளியிடங்களுக்கு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. சங்கீதா சென்னை மற்றும் லண்டன் என அடிக்கடி வந்து செல்வதற்கு கூட தளபதியின் மகன் சென்னையில் இருப்பது தான் காரணம் என கூறப்பட்டது. இப்படி தளபதியின் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் தட்டி விட்டுவிட்டு அரசியல் வாழ்க்கையில் ஐக்கியம் ஆகி கடைசி படத்தையும் அறிவித்தார் விஜய்.
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜயுடன் த்ரிஷாவும் சென்றுள்ளார். விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்ற நிலையில் விமான நிலையத்தில் இருந்து இறங்கி காரில் போன போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் மற்றும் த்ரிஷா சேர்ந்து பயணித்தது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, Justiceforsangeetha என்ற ஹேஷ்டேக்கையும் நெட்டிசன்கள் தேசிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோவினை பகிர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியவில்லை. ஆனால், சக நடிகையின் திருமணம் என்றவுடன் தனி விமானம் பிடித்து உங்களால் கோவா செல்ல முடிகிறதா என திமுகவினர் களமாடி வருகின்றனர். மேலும், தனிமனித ஒழுக்கம் இல்லாத விஜய் திமுகவை ஒழிக்க வந்துவிட்டாராம் எனவும், இன்னும் அவர் நடிகராக மட்டுமே தொடர்கிறார் என்றும் சாடி வருகின்றனர். களத்தில் இறங்க தயாராக இல்லாத அரசியல்வாதி நடிகர் தான் விஜய் எனவும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.