Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லியில் விஜய்யிடம் 7 மணி நேரமாக நடந்த விசாரணையில் அடுத்தடுத்து 50 முதல் 60 கேள்விகள் கேட்டு திணறடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ இதனை விசாரித்து வருகிறது. இதில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல் குமாரிடம் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், திடீர் திருப்பமாக தவெக தலைவர் விஜய்யை நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அளித்தது. இதனை ஏற்று இன்று காலை 11:30 மணியளவில் சிபிஐ அலுவலகம் சென்றார் விஜய். அப்போது விஜய்யிடம் விசாரணை நடத்த 2 டிஎஸ்பிக்கள், 2 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விஜய்யிடம் கேள்வித்தாள் ஒன்றை கையில் கொடுத்துள்ளனர். அதில் ஒரு வார்த்தையில் பதில் அளிக்கும்படி, ஆமாம், இல்லை என்கிற வகையில் கேள்விகள் இடம்பெற்றதாக தெரிகிறது. அவரது பெயர் என்ன? கரூருக்கு எத்தனை மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் எத்தனை மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டீர்கள்.?  நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்? கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா? கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்? மக்கள் பாதுகாப்பாக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என அடுத்தடுத்து 50 முதல் 60 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு தனது வழக்கறிஞரின் துணையோடு விஜய் பதிலளித்தாக தகவல் வெளியாகியுள்ளது. 7 மணி நேர விசாரணைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார் விஜய். விசாரணை முடிந்ததும் இன்று இரவே விஜய் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளையும் அவரிடம் விசாரணையை தொடர முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். அதனால் இன்று டெல்லியிலேயே தங்கி நாளை சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகவுள்ளார் விஜய்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola