Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே உள்ள டீக்கடையில் சமோசா டீ சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் நழுவிய கும்பலை கடையின் உரிமையாளர் கேள்வி எழுப்ப, அந்த கும்பல் டீக்கடையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே டீ கடை வைத்து நடத்தி வருபவர் காதர் பாஷா. இரவு 8 மணிக்கு கடையின் முன் வந்து நின்று பேருந்தில் இருந்து இறங்கி வந்த கும்பல் கடையில் இருந்த சமோசா வை அவர்கள் இஷ்டம் போல எடுத்து சாப்பிட்டு உள்ளனர்.
மேலும் டீ யும் குடித்து விட்டு 11 சமோசா மற்றும் டீ க்கு கடையின் உரிமையாளர் காதர் பாஷா பணம் கேட்ட போது நாங்கள் 11 பேர் வரவில்லை 4 பேர் தான் வந்தோம் என 4 சமோசா மற்றும் டீ க்கு மட்டும் பணம் கொடுத்து நழுவிச் சென்றுள்ளனர்.
இதனை கவனித்த டீக்கடை உரிமையாளர் காதர் பாட்ஷா டீ மற்றும் சமுசா வை சாப்பிட்டுவிட்டு பணத்தை கொடுக்காமல் செல்வது எப்படி நியாயம் என கேட்ட பொழுது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கடையின் உரிமையாளர் கோபமடைந்து எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் நீங்கள் செல்லுங்கள் என கூறியதால் ஆத்திரமடைந்த கும்பல் "நீ என்ன எங்களுக்கு பிச்சை போடுகிறாயா என கேட்டு கடையின் உரிமையாளர் காதர் பாஷா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது தடுக்க முயன்ற அவரது மகன் இர்பான் மற்றும் கடையின் உரிமையாளர் சேக்கிழார் உள்ளிட்ட கடையில் இருந்து நால்வரையும் பேருந்தில் இருந்த கும்பல் சரமாரியாக தாக்கியதோடு கடையின் உள்ள ஷோகேஸ் கண்ணாடியை உடைத்து பொருட்களையும் வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்த வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்ததில் பேருந்தில் வந்தவர்கள் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தததை தொடர்ந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.