
Upanishad Ganga Series | உபநிஷத் கங்கா தொடர் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி அண்ணாமலை பங்கேற்பு | Annamalai
சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கத்தின், "உபநிஷத் கங்கா" - 52 வார தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஶ்ரீ. என்.கோபாலசாமி மற்றும் துக்ளக் ஆசிரியர், ஶ்ரீ குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள, சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வாமி ஸ்வரூபானந்தா முன்னிலை வகித்தார். 2012 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற "உபநிஷத் கங்கா" தொடர் 13 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதன் தன்மை மாறாமல் உள்ளது. எக்காலத்திலும் மனிதர்களில் ஆன்மீக சிந்தனையை, ஆர்வத்தை, நேர்வழியை தூண்டும் இத்தொடரை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட சின்மயா மிஷின் சனாதன சேவா சங்கம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் பெரும் முயற்சி செய்து "உபநிஷத் கங்கா" 52 வார தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.
அதனை வெளியிடும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஶ்ரீ.கோபாலசாமி, துக்ளக் இதழின் ஆசிரியர் ஸ்ரீ. குருமூர்த்தி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடரை வெளியிட்டனர்.அவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக, உபநிஷத் கங்கா தொடரின் இயக்குனர் முனைவர். சந்திரபிரகாஷ் திவேதி, சென்ட்ரல் சின்மயா மிஷன் அறக்கட்டளையின், தலைமை செயல் அதிகாரி முனைவர், மனிஷா கேம்லானி, சனாதன சேவா சங்கத்தின் நிறுவனர் ஶ்ரீ. கோபால் சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உபநிஷத் கங்கா தொடரின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.