கொதித்த கேரளா... யார் இந்த சைலஜா Teacher? | Shailaja | Pinarayi Vijayan | Kerala
நிபா வைரஸ், நிலச்சரிவு, புயல், கொரோனா வைரஸ் போன்று பல்வேறு இடர்களை அறிவார்ந்த செயல்பாடுகளுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்ட ஷைலஜா அமைச்சரவையில் இடம்பெறாதது அந்த மாநிலத்திற்கே மிகப்பெரிய இழப்பு என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகிறது. அவரையே மீண்டும் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், நிச்சயமாக பினராயி விஜயன் ஷைலஜா டீச்சர் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து மீண்டும் பரிசீலிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.