TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

Continues below advertisement

மானாமதுரை தவெக எம்.எல்.ஏ இளங்கோவன், தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகேவுள்ள கொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரின் மனைவி ஜெயலெட்சுமி. இவர்களுக்கு தேவமித்ரா என்கிற மகள் உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை தனி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், திமுக வேட்பாளர் தமிழரசியை சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.எல்.ஏ ஆனார்.

 இந்த நிலையில், இவரின் மகள் தேவமித்ரா தனது கிரமத்துக்கு அருகிலுள்ள அகரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார்.

தற்போது, 6-ம் வகுப்பிற்காக வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இளங்கோவன் தனது மகளை திருப்புவணத்தில் செயல்பட்டுவரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

மேலும், தானும் அரசுப் பள்ளியில்தான் பயின்றதாகவும் தன்னுடைய மகளும் அரசு பள்ளியிலேயே படிப்பைத் தொடரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய கலகட்டடத்தில் வார்டு கவுன்சிலர் கூட தங்களின் பிள்ளைகளை மிகப்பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலையில், எம்.எல்.ஏ ஆன பிறகும் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கும் இளங்கோவனின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola