Trichy VarunKumar SP | ’’I AM WAITING’’வருண் IPS அடுத்த சம்பவம்..கதிகலங்கும் ரவுடிகள்

“I AM WAITING” என திருச்சி எஸ்.பி. வருண்குமார் போட்டுள்ள வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

திருச்சி எஸ்.பியாக வருண்குமார் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு வழங்கபப்டும் முதல்வரின் “அண்ணா விருதை” வருண்குமாருக்கு அறிவித்து அவரது பணியை கவுரவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில் முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தனது வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் ஆக “I AM WATING”  என பதிவு செய்து ஒரு மெசெஜை கொடுத்துள்ளார்

பொதுமக்கள் தயக்கமின்றி தன்னை தொடர்புகொண்டு குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் வருண்குமார் ஐ.பி.எஸ்

அரிசி திருடுவது, நில அபகரிப்பு, போலி பத்திரம் தயாரித்தல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம், ஹவாலா, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கூலிப்படை மூலம் மிரட்டல், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, திரள்நிதி என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பது என எந்த குற்றமாக இருந்தாலும் மக்கள் தைரியமாக தன்னை தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான தொடர்பு எண்ணாக 9487464651 என்ற எண்ணையும் அவர் பகிர்ந்துள்ளார்.

குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்பதை குறிப்பிடும் விதமாக “I am waiting” என தனது வாட்ஸ்-அபில் ஸ்டேடஸ்ம் வைத்திருக்கிறார் வருண்குமார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola