Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
திருச்சியில் கல்லூரி மாணவியும் திருநங்கை ஒருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரஹீமா (20) இவர் விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி பாரா மெடிக்கல் (Critical care) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் துறையூரில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் வந்து செல்வார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அவர் கல்லூரியை முடித்துவிட்டு மதியம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பேருந்தில் ஏறி உள்ளார் அப்பொழுது அந்தப் பேருந்தில் ஏறிய ஒரு திருநங்கை ரஹீமாவிடம் யாசகம் கேட்டுள்ளார் அப்போது அவருக்கு யாசகம் தர ரஹீமா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த திருநங்கை பேருந்தில் இருந்த மாணவியாக சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது இந்த சம்பவம் குறித்து ரஹீமா கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் அந்த திருநங்கை மீது ஆபாசமாக பேசுதல் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தன்னை அவமரியாதையாக பேசியதாக கூறி மாணவி ஒருவரை திருநங்கை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.