TN Police vs TNSTC : கையக்கொடு..கட்டிப்பிடி..போலீஸ் vs நடத்துநர்முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

Continues below advertisement

நாங்குநேரியில் காவலர் நடத்துநர் இருவருக்கு இடையேயான பிரச்சனை இரு துறைகளுக்கு இடையேயான பிரச்சனையாக  பூதாகரமான நிலையில், சிங்கம் பட விவேக் ஸ்டைலில் கையக்கொடு கட்டிப்பிடி என்ற பாணியில் இந்த பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இரண்டு முக்கிய துறைகளான போக்குவரத்துதுறை மற்றும் காவல்துறைக்கு இடையே கடந்த சில நாட்களாகவே கோல்டு வார் நடந்து வந்தது

இதற்க்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது நாங்குநேரி சம்பவம். நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணம் செய்த காவலரிடம் நடத்துநர் டிக்கெட் எடுக்க கூறிய போது காவல்துறை டிக்கெட் எடுக்க தேவையில்லை என கூறி இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடந்து போக்குவரத்துதுறை வாரண்ட் உடன் பயனம் செய்யும் போது மட்டுமே காவலர்கள் டிக்கெட் எடுக்க தேவையில்லை எனக் கூறி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது

இங்கு தான் போர்க்கான அடித்தளம் இடப்பட்டது. எங்க கிட்டயா டிக்கெட் கேட்ட இனி என்ன பண்ரோம் பாரு என்கிற பாணியில் போக்குவரத்து போலீஸ் அரசு பேருந்துகள் மீது சரமாரியாக ஃபைன் போட தொடங்கினர்.

அதிகளவில் பயணிகள் ஏற்றுவது, நிறுத்தத்தில் நிறுத்தப்படவில்லை, நோ பார்க்கிங் என பல பிரிவுகளின் கீழ் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது அபராதம் விதித்தனர்.

அதுமட்டுமின்றி சீட் பெல்ட் அணியவில்லை என்றெல்லாம் கூறி அரசு பேருந்து ஓட்டுநருக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்த சம்பவம் பேசுபொருளானது.

நாங்குநேரி சம்பவத்திற்கு பழிவாங்கும் செயலாகவே இவை பார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசின் 2 துறை இவ்வாறாக வெளிப்படையாக மோதலை வெளிப்படுத்துவது சரியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இந்நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பனித்ரா ரெட்டி, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகிய இருதுறை செயலாளர்களும் இன்று சம்பந்தப்பட்ட காவலர் மற்றும் நடத்துநரை நேரில் அழைத்து தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் சமரசமாக பேசி கைகுலுக்கு கட்டிப்பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்துறை - போக்குவரத்து துறைக்கு இடையேயான வார் முடிவுக்கு வந்துள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram