Tiruvannamalai Collector : லைசன்ஸ் CANCEL பண்ணுங்க” கறார் காட்டிய கலெக்டர்!சைக்கிளில் வந்து சம்பவம்
சைக்கிளில் சென்று ஆய்வு செய்த திருவண்ணாமலை கலெக்டர், இப்படி தான் சுத்தம் பண்ணாம இருப்பீங்களா, லைசன்ஸ உடனடியா கேன்சல் பண்ணுங்க என கழிவறை ஒப்பந்ததாரிடம் கறார் காட்டியதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில்
இந்த கோவிலின் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் மாதா மாதம் பெளர்ணமி அன்று பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருவது வழக்கம்..
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கிரிவலம் வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து தரப்படுகிறதா என்பதை சைக்கிளில் சென்று தீவிர ஆய்வு மேற்க்கொண்டார்
அப்பொழுது திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கட்டண கழிப்பிடத்தை ஆய்வு மேற்கொண்டார், ஆனால் முறையாக சுத்தம் செய்யப்படாமலும் முறையாக டோக்கன் வழங்காமல் கட்டண கழிப்பிடம் செயல்படுவதை கண்டும், கழிவறை கட்டிடத்தை சுற்றி ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி இருப்பதும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் குடித்துவைத்து போட்ட காலி மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
.தொடர்ந்து கழிவறைக்குள் சென்று ஆய்வு செயத ஆட்சியர் கழிவறை ஒப்பனை அறை ஏதும் சுகாதாரமில்லாமல் இருந்ததை கண்டு நகராட்சி ஆணையருக்கு உடனடியாக தொடர்பு கொண்டு முறையாக செயல்படாத கழிவறை ஓப்பந்ததாரின் ஒப்பந்தத்தை நீக்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வால் நகர மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.