Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஏழு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 7 பேரின் நிலை என்ன ஆனது என்பது கேள்வியாக மாறியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆய்வு குழுவினர் இந்த இடத்தில் ஆபத்தான முறையில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி கனமழை பெய்தது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் திருவண்ணாமலையில் மழைப் பொழிவின் காரணமாக அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவினால் மலை மீது இருந்த பாறை அடிவாரத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்கு மேல் விழுந்தது. அப்போது வீடுகளுக்குள் இருந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர். மாநில மீட்புப் படை, தேசிய மீட்புப் படை என 100க்கும் மேற்பட்டோர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் விபத்திற்கு முன்பு கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உயிர் தப்பிய பெண்மணி ஒருவர் ABP NADU-விற்கு பிரத்தேயக பேட்டி அளித்துள்ளார். (BYTE)
விபத்து குறித்து முன்னாள் ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது இந்த இடத்தில் ஆபத்தான முறையில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். (BYTE)