Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
திருப்பத்தூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவனை சத்துணவு அமைப்பாளர் ஜாதி பெயரை சொல்லி அநாகரிகமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பத்மினி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சத்துணவு வாங்கும் பொழுது, அந்த மாணவனை பார்த்து இந்த பசங்களே இப்படித்தான் எப்ப பாரு ரெண்டு முட்டை கேக்குறாங்க என சாதி பெயரை குறிப்பிட்டு அநாகரிகமாக பேசி உள்ளார். இது குறித்து அந்த மாணவன் தன்னுடைய மாமாவிடம் கூறி அவர் வந்து கேள்வி எழுப்பியும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என தகாத முறையில் பேசி உள்ளார் பத்மினி.
இது குறித்து அந்த பள்ளி மாணவன் செய்தியாளரிடம் ஆதங்கமாக தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறார் மேலும் தகாத வார்த்தைகளால் என்னை பேசினார் என ஆதங்கமாக கூறினார்.
அது மட்டுமல்லாமல் சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டரில் தான் சமையல் செய்ய வேண்டும் என பொருட்கள் அரசு கொடுக்கும் அதை மதிக்காமல் விறகு அடுப்பில் சத்துணவை செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.