Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்
திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் அதிகளவு கலப்படங்கள் கலந்து விநியோகித்ததாக ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் போலீசிஸ் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகள் கொழுப்பு பயன்ப்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திர பாபு குற்றம் சாட்டியிருந்தார். இதனால அடுத்த நாளே திருப்பதி லட்டு குறித்து ஆய்வக ரிப்போர்ட் ஒன்று வெளியானது. இந்த ரிப்போர்டில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதகரமாக வெடித்த நிலையில் கோயிலுக்கு நெய் சப்ளை செய்த டெய்ரி நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், நெய் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் ஏஆர் டெய்ரி நிறுவனம் உணவு பாதுக்காப்பு மற்றும் தர விதிகளை கடைப்பிடிக்க தவறியதால் மத்திய உணவுப் பாதுக்காப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் நோட்டீல் அனுப்பியது. மேலும் நெய் அனுப்பிய ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் பிளாக் லிஸ்டில் வைத்துள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு நிலையத்தில் தேவஸ்தானம் பொது மேலாளர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு வழங்கப்பட்ட நெய்யில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றை கலந்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் கோவிலுக்கு விநியோகம செய்தாக அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோவில் நிரவாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதைஅடுத்து போலீசா