Tirupathur Women | ஆபாசமாக பேசிய நபர்! தர்மஅடி கொடுத்த பெண்கள்! பெட்ரோல் ஊற்றிய பகீர் சம்பவம்

திருப்பத்தூரில் நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த நபருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் நூறு நாள் பணியில் பெண்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாகராஜ் என்பவர் பெண்களிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்துள்ளார். சில பெண்கள் தட்டி கேட்ட போது ஆத்திரமடைந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஒன்று கூடி தென்னை மட்டையால் தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்த நபரும் பதிலுக்கு தாக்கியதுடன் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து பெண்கள் மீது ஊற்றி தீயிட முயற்சித்துள்ளார். உடனே சுதாரித்த பெண்கள் அம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அந்த நபர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும் அதே பகுதியில் உள்ள தனது மச்சான் வீட்டிற்கு சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி வந்து தகராறு செய்வதும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடமே எல்லைமீறி பேசி தர்மடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola