Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?

Continues below advertisement

திருப்பத்தூர் அருகே சொத்து தகராறு தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளும் மகன் வீடியோ வெளியாகி பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு 82 வயதான இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இவர் தனது சொத்துக்களை இரு மகன்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்த நிலையில் மேலும் அவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனக்கு வேண்டும் எனக் கூறி மூத்த மகன் மார்க்கபந்தீஸ்வரன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு தனது தந்தைக்கு தெரியாமல் தாயாரை அழைத்து சென்று தனது பெயரில் சொத்துக்களை பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

தனது மனைவி பெயர் உள்ள சொத்துக்களை தனக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்து கொண்ட மூத்த மகனை தட்டி கேட்டதால் 82 வயது முதியவர் எனவும் பாராமல் தனது சொந்த தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளி கொலைவெறி செயலில் ஈடுபட்டுள்ளார் மார்க்கபந்தீஸ்வரன் இதில் எலும்பு முறிவு மற்றும் பலத்த காயம் அடைந்த முதியவர் அப்பாவுவை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்

இது குறித்து முதியவர் அப்பாவு  நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கவந்தீஸ்வரர் உள்ளிட்ட நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram